பஞ்சபட்சி சாஸ்திரம், பயன்பாடு
பஞ்சபட்சி சாஸ்திரம் என்பது காகபுசுண்டர். அகத்தியர் ரோமரிஷி போன்ற சித்தர்களால் எளியவர்களுக்காக எளிமையாக உருவாக்கப்பட்டது. வடநாட்டில் கர்க்கர், பராசரர், வராஹர், காளிதாசன், போன்ற வான சாஸ்திர வல்லுனர்கள் வானத்தில் சஞ்சரிக்கும் நவக்கிரகங்களின் துணை கொண்டு ஜோதிட சாஸ்திரம் இயற்றியதுபோல் தென்னாட்டில் குறிப்பாக தமிழகத்தில் மேலே கூறிய சித்தர்களால் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் போன்ற 5 பட்சிகளின் குணத்தையும் திறமையையும் தன்மையையும் ஆராய்ந்து வானத்தில் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களின் தன்மையையும் ஆராய்ந்து இரண்டையும் இணைத்து பஞ்சபட்சி சாஸ்திரம் என்னும் சாஸ்திரத்தைப் படைத்தார்கள். இதைத் தெரிந்து கொள்வதற்கும் நடைமுறையில் செயல்படுத்துவதற்கும், மிகவும் எளிமையானது, பஞ்சபட்சி சாஸ்திரப்படி நாளும் நேரமும் நன்றாக இருந்தால் அஷ்டமி, நவமி, மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம், கரிநாள், தனிய நாள் போன்ற எந்த நேரமும் தீய பலனைத் தராது. நடைமுறையில் கெட்ட நாட்களில் கூட நல்லவையும், நல்ல நாட்களில் கூட கெட்டவையும் நடப்பது உண்டு. பஞ்சபட்சி சாஸ்திரப்படி நேரம் கணித்துப்பார்த்தல் இந்த உண்மை நன்கு விளங்கும்.
நாம் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு பஞ்சபட்சி சாஸ்திரம் பார்த்து செயல்பட்டால் வெற்றி பெறமுடியும்.
- புதுத் தொழில் ஆரம்பிக்க
- பகைவரை வெல்ல
- கோர்ட், வழக்குகளில் வெற்றிபெற
- கடன் கொடுக்க
- கடன் வாங்க
- ஆபரேஷன் செய்ய
- மருந்துண்ண
- புது உத்தியோகத்தில் சேர
- மேலோரைக் காண
- நண்பர்கள் யார்? எதிரிகள் யார்? என்று அறிய
Birth data not set. Click here to set